×

கொரோனா வைரசுக்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு அவசர கால நிதியாக ரூ.7,600 கோடியை ஒதுக்கீடு செய்தது உலக வங்கி

வாஷிங்டன் : கொரோனா வைரசுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு அவசர கால நிதியாக ரூ.7,600 கோடியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவ உபகரணங்கள், நிவாரண உதவிகளை மேற்கொள்ளவதில் வளரும் நாடுகள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக வளரும் நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்தியாவுக்கு 7,600 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஆய்வக பரிசோதனைகளை மேம்படுத்த உலக வங்கியின் நிதி உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்கவும் தனிமைப்படுத்தும் வார்டுகளை புதிதாக அமைக்கவும் இந்த அவசர கால நிதி உதவும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகளுக்கு ரூ.14,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள உலக வங்கி, அதில் ரூ.7,600 கோடியை இந்தியாவுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.     

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில்
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,300 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

Tags : World Bank ,India , Corona, India, World Bank, Medical Equipment, Tamil Nadu
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...