மாணவர்கள் படிப்பு தடைபடுவதை தடுக்க ஆன்லைன் மூலம் பாடம் நடத்துங்கள்: சென்னை பல்கலை துணைவேந்தர் உத்தரவு

சென்னை: மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை நடத்த போதிய கால அவகாசம் இல்லை என்பதால் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த வேண்டும் என்று சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.  சென்னை பல்கலைக் கழக அனைத்து துறைத் தலைவர்களுக்கும் துணைவேந்தர் துரைசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:  கொரோனா ஊரடங்கால் இந்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை நடத்தி முடித்து தேர்வு முடிவுகளை வெளியிட அவகாசம் இல்லை.

எனவே ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும். வீடியோவில் பாடங்களை பதிவு செய்து நடத்துவது, வாட்ஸ் அப் குரூப் மூலம் பாடங்களை நடத்துவது போன்ற பல்வேறு வழிகளில் பாடங்களை நடத்த வேண்டும். இந்த அனுபவம் எதிர்காலத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு முழு வீச்சில் பாடங்களை நடத்த உதவியாக இருக்கும். இவ்வாறு துணை வேந்தர் துரைசாமி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: