உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது..அதிகப்பட்சமாக இத்தாலியில் 13,915 பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 53,166 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,014,499 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 212,018 பேர் குணமடைந்தனர். மேலும் 37,698 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,915 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,242- ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 10,348 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,065-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 7,947 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,062 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,44,320-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 968 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.  பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,387  அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஈரானில் 3,160 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சீனாவில் 81,589 பேருக்கும், ஜெர்மனியில் 84,794 பேருக்கும், பிரான்சில் 59,105 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 760 உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 961 உயிரிழந்துள்ளனர். பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,355 உயிரிழந்துள்ளனர்.

Related Stories: