சொல்லிட்டாங்க...

21 நாள் முடக்கம் திட்டமிடாமல் அமல்படுத்தப்பட்டதால் வௌிமாநில தொழிலாளர்களுக்கு குழப்பத்தையும், கஷ்டத்தையும் ஏற்படுத்திவிட்டது. - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

கடன் மாத தவணை  ஒத்திவைப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கான சலுகை என்பதால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியும் தள்ளுபடி செய்ய வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

மக்களிடையே மதஉணர்வின் அடிப்படையில் வெறுப்பை விதைத்து, பிரிவினையை ஏற்படுத்தும் வெறுப்பு பிரசாரங்களை கைவிடவேண்டும். - விசிக தலைவர் திருமாவளவன்

மத்தியஅரசில் ஏற்பட்டுள்ள அதிகார குவியலின் காரணமாக, எல்லாவற்றுக்கும் பிரதமரை முன்னிலைப்படுத்துவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழிவகுக்குமா? - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: