உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சை மையங்களான விளையாட்டு அரங்கங்கள்

சென்னை: கொரோனா கொள்ளை ேநாய் வேகமாக பரவி வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு, கண்காட்சி  அரங்கங்கள்  கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. சீனாவில் இருந்து பரவி உலகம் முழுவதையும் ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறது கொரோனா வைரஸ்.  சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, இந்தியா  என உலகம் முழுவதும் பல லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். பல நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப அவர்களை தனிமைப்படுத்த  பல நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் இட வசதியே இல்லை.

பல நாடுகளில் மருத்துவ சேவை தனியார் மயமாக்கப்பட்டுள்ளன.

அதனால் அவர்கள் கொேரானாவுக்கு சிகிச்சை அளிக்க அவை முன்வருவதில்லை. எனவே அரசுகள் புதிதாக சிகிச்சை மையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

 பல நாடுகளில் நகருக்கு வெளியே, தாராள இட வசதியுடன் உள்ள விளையாட்டு அரங்கங்களும், கண்காட்சி அரங்கங்களும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படுகின்றன.கொேரானா பீதிக்கு பிறகு உலகம் முழுவதும் உள்ளூர், தேச, சர்வதேச விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதனால்  விளையாட்டு அரங்கங்களை சிகிச்சை மையங்களாக மாற்றுவதில் பிரச்னை ஏதுமில்லை. மேலும் விளையாட்டு அரங்கங்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. ஈரானில் ஒரு விளையாட்டு அரங்கம் 2000 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமாக மாறி உள்ளது.

அமெரிக்காவின் பிலடெல்பியா டெம்பிள் பல்கலைகழக விளையாட்டு அரங்கம் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் மியாமியில் உள்ள ஹார்டு ராக் அரங்கம் கொரோனா சோதனை மையமாக செயல்படுகிறது. பிரேசிலில் உள்ள சாபவுலா, பெருவில் உள்ள லிமா  கால்பந்து விளையாட்டு அரங்கங்கள்  சிகிச்சை மையமாக்கும் பணிகள் நடக்கின்றன. அங்கு கொரோனா தொற்று ஏற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

 இப்படி  செர்பியா, இங்கிலாந்து, பாகிஸ்தான்,   உட்பட பல நாடுகளில் விளையாட்டு அரங்கங்கள், கண்காட்சி அரங்கங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.  இந்தியாவிலும் அசாம் மாநிலம் கவுகாத்தி சருசோஜய் விளையாட்டு வளாகம் கொேரானா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த  மையம்  700 படுக்கை வசதிகள் கொண்டதாக இருக்கும்.

அர்ஜென்டீனாவில்  40 ஆயிரம் பேர்:

உலகம் முழுவதுமுள்ள கால்பந்து கிளப்களில்  பிரேசில், அர்ஜென்டீனா நாட்டு வீரர்கள்தான் அதிகம் இடம் பெறுகின்றனர். கொரோனா பீதிக்கு பிறகு பலரும் தாய்நாடு திரும்பினர். அவர்கள் மூலமாக உள்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. அதனால் அர்ஜென்டீனாவில் கால்பந்து வீரர், வீராங்கனைகள் என 40 ஆயிரம் பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: