×

ஒவ்வொருவரின் நலனும் முக்கியம்; உங்கள் நலன் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்: முதல்வர் தொலைபேசி ஆடியோ வாயிலாக வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி, அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருசில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவிலே காணப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் மீண்டும் மீண்டும் மக்களை அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஒரு புதிய முயற்சியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி ஆடியோ வாயிலாக தமிழக மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Airtel, BSNL, JIO ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலமாக எடப்பாடி பழனிசாமி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அந்த ஆடியோவில் முதல்வர் கூறுவதாவது; வணக்கம் உங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன். உலகம் எங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்து நடவடிக்கைகளை போக்கால் அடிப்படையில் எடுத்து வருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எங்களுக்கு முக்கியம். உங்கள் நலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனவே இந்த நோயை கட்டுப்படுத்த விழித்திருங்கள், விலகியிருங்கள், வீட்டிலேயே இருங்கள் நன்றி வணக்கம். என குறிப்பிட்டுள்ளார்.


Tags : government ,CM , Government, action, CM
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்