கொரோனா பரவலை கட்டுப்படுத்த இலங்கை அரசு தீவிரம்: விரைவில் மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவமனை

கொழும்பு: கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அரசு மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இலங்கையிலும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தோற்றால் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே அடுத்த 2 வாரங்கள் அபாயகரமான காலகட்டம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

அபாய வளையத்திற்குள் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தளபதி சவேந்திர சில்வா வெளிநாடுகளுக்கு சென்று இலங்கை திரும்பிய 321 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கி மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்துள்ளதாக கூறினார். மேலும் 32 முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1,173 பேர் விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Stories: