ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் சென்னை பாடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் சென்னை பாடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாடியில் உள்ள பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கியுள்ளன.இதனிடையே சென்னையில் 144 தடை உத்தரவை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடை உத்தரவை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டித்து ஆணையர் உத்தரவிட்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

 கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வர கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.     இந்நிலையில் சென்னை நகருக்குள் காரணமின்றி சுற்றி திரியும் வாகனங்களை தடுக்க காவல்துறை தீவிரப்பணியில் ஈடுபட்டுள்ளது. நகரில் உள்ள 169 சோதனை சாவடிகளில் வாகனங்களின் எண், பெயர்களை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். சென்னை பாடி மேம்பாலத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.மேம்பாலத்தின் 3 புறமும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் பதற்றம் நிலவிய நிலையில் வாகனங்கள் போக்குவரத்தை தடுக்க காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: