புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் வசித்து வந்த ஊருக்கு சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர். அவ்வகையில் டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வசித்து வந்த அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதி சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில், புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழகத்தில்  நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு, மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 124 ஆனது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 147 குணமடைந்தது வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: