திருச்சி, புதுகையில் 600 ஏக்கரில் சாகுபடி வாங்க வியாபாரிகள் வராததால் செடியிலேயே கருகும் பூக்கள்: விவசாயிகள் வேதனை

திருச்சி: திருச்சி, புதுகையில் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பூ க்களை வாங்க வியாபாரிகள் இல்லாததால் செடியிலேயே கருகும் அவல நிலை உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பூக்களை வாங்க வியாபாரிகள் இன்றி செடிகளிலேயே கருகி வருவதால் பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் போதாவூர், புலியூர், போசம்பட்டி, எட்டரை, கோப்பு போன்ற பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் மல்லிகை பூ, விருச்சி பூ, செவ்வந்தி பூ போன்ற பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது.

வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூ விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, நெய்வர்த்தலி உள்ளிட்ட 30 கிராமங்களில் 500 ஏக்கரில் மல்லிகை பூ, விருச்சி பூ, செவ்வந்தி பூ ஆகியவை பயிரிப்பட்டு வாங்குவதற்கு வியாபாரிகள் இன்றி செடியிலேயே கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். வியாபாரிகள் எளிதாக வந்து வாங்கி செல்லும் வகையில் எட்டரை உள்ளிட்ட ஏதாவது ஒரு பகுதியை தேர்வு செய்து பூ விற்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: