நாகை, நாகூர் பகுதியில் தங்கியுள்ள ஆதரவற்றவர்களுக்கு இலவச உணவு, உடை: நகராட்சி நிர்வாகம் வழங்கியது

நாகை: நாகை மற்றும் நாகூர் பகுதியில் தங்கியுள்ள ஆதவற்றவர்களுக்கு நகராட்சி சார்பில் இலவசமாக உணவு, உடைகள் வழங்கப்பட்டது.கொரோனோ வைரஸ் எதிரொலியால் சாலைகளில் சுற்றித்திரியும் ஆதவற்றவர்கள், பஸ்ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் தங்கியுள்ள ஆதவற்றவர்கள் ஆகியோர் கணக்கெடுக்கப்பட்டு அவர்கள் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையம், நாகூர் பழனியாண்டவர் விடுதி உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நாகையில் 150 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தினந்தோறும் 3 வேளையும் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நகராட்சி சார்பில் உடைகள், சோப்புகள், எண்ணெய், சீப்பு, பல்பொடி ஆகியவை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட காயாரோகணசுவாமி கோயில், சௌந்த ராஜபெருமாள் கோயில், நடுவதீஸ்வரசுவாமி கோயில், நாகநாதசுவாமி கோயில் ஆகிய 4 கோயில்களில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டது.கொரோனோ எதிரொலியால் அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்த 4 கோயில்களும் இணைந்து தினந்தோறும் 150 நபர்களுக்கு உணவு சமைத்து நகராட்சி அனுமதியுடன் நாகையில் தங்கியுள்ள ஆதவற்றவர்களுக்கு நேற்று முதல் விநியோகம் செய்ய தொடங்கினர்.

Related Stories: