காரைக்காலில் ரூ.2 லட்சம் சாராய பாக்கெட் மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கலர் சாராய பாக்கெட் மற்றும் பாட்டில்கைளை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 144 தடை உத்தரவு போடப்பட்டதோடு மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மற்றும் சாராய கடைகளை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் கொன்னக்காவலி கிராமத்தில் சட்டவிரோதமாக பாக்கெட் மற்றும் பாட்டில் சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக கோட்டுச்சேரி போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி தலைமையில் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர்.

Advertising
Advertising

அப்போது அங்கு கலைச்செல்வன் (28) என்பவர் சாராயக்கடையிலிருந்து சாராயத்தை வாங்கி, கலர் ஏற்றி கலர் சாராய பாக்கெட்டுகளாகவும் மற்றும் பாட்டில்களாகவும் கூடுதல் விலைக்கு விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கலால்துறை அதிகாரி தேவதாஸ் முன்னிலையில் கலைச்செல்வனை கைது செய்த போலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கலர் சாராயம், சாராய பாக்கெட், சாராய பாட்டில் மற்றும் பாட்டில் சீல் வைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான கலைச்செல்வனுக்கு சாராயம் சப்ளை செய்த பிரபு (35) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: