2 மாதங்களில் 2வது முறையாக சிலிண்டர் விலை குறைப்பு : சென்னையில் சிலிண்டர் விலை ரூ. 65 குறைந்து ரூ.761.50க்கு விற்பனை

சென்னை : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 65 குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னையில் மானிய விலை சிலிண்டர் ரூ. 65 குறைந்து ரூ.761.50க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. கடந்த 2 மாதங்களில் 2வது முறையாக சிலிண்டர் விலை குறைந்தது. சென்னையில் ரூ. 826க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.761.50க்கு விற்பனையாக உள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை நாடே முடங்கியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில், ஏற்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் தற்போது வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் எரிவாயு விலை 65 ரூபாய் குறைந்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 826 ரூபாயாக இருந்த நிலையில் சிலிண்டரின் விலை 65 ரூபாய் குறைந்து 761 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைக்கும், மானியத்துடன்கூடிய சிலிண்டரின் விலைக்கும் இடையேயான வித்தியாச தொகை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.விலை குறைப்புக்கு பின் டெல்லியில் சமையல் எரிவாயு விலை ரூ. 744க்கும் மும்பையில் ரூ.714.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: