போலீஸ் வலையத்தில் களக்காடு நகரம்: டெல்லி மாநாடு சென்ற நெல்லை களக்காட்டை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தோற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லி நிஜாமுதினில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மர்காஸில் (மையத்தில்), இந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில்,  1000-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து கலந்து கொண்டதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இவர்களில் பலர்மாநாட்டை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு திரும்ப வந்துவிட்டனர். அவர்களில் பலர் கொரோனா நோய்  தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது தற்போது தெரியவருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேருக்கு நேற்று காலையில் நோய்  கண்டறியப்பட்டது. அதில் 5 பேர் டெல்லி மாநாடுக்கு சென்றவர்கள். மாலையில் 50 பேருக்கு கொரோனா நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 45 பேர் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள். இதில் 22 பேர் நெல்லை, 18 பேர்  நாமக்கல், 4 பேர் கன்னியாகுமரி, ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களில் 515 பேரை மட்டுமே கண்டுபிடித்துள்ளோம். மற்றவர்கள் தேடி வருகிறோம் என்றார்.

இதற்கிடையில், டெல்லியில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதால், அவர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மொத்தம் 66 பேர்  டெல்லி சென்றுள்ளனர். அவர்களில், 28 பேர் பிடிபட்டுள்ளனர். மீதம் உள்ள 38 பேரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், நேற்று, 427 பேர் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல, நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிலரையும் பிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிக்கிய 22 பேரில் 17 பேர் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள். 3 பேர் களக்காடு பகுதியை சேர்ந்தவர்கள். இந்நிலையில், நேற்று கண்டறியப்பட்ட களக்காடு வியாசராஜபுரத்தை சேர்ந்த 3 பேர் நெல்லை  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா சோதனை செய்யப்பட்டது. தற்போது, அவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, அவர்களுடன் நெருங்கிவர்கள், குடும்ப உறுப்பினர்களை கண்டறிந்து  சோதனை செய்தும் முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. மேலும், களக்காடு சுற்றுப்புற சாலைகள் மூடப்பட்டு நகரம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Stories: