ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஊழியர்கள் பெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் தங்கி வேலை செய்கின்றனர்.தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.இதையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வகம் சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதன்பேரில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் கிருமி நாசிளி தெளிப்பு, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு, முக கவசம், கையுறை அணிவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட  சிவன்தாங்கல் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, தீயணைப்பு இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கபட்டது. மேலும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு, அறிவுரை கூறினார். மேலும் குடியிருப்பு பகுதியை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் சமூக இடைவெளியை பயன்படுத்த வேண்டும் என கூறினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் போந்தூர் செந்தில்ராஜன், மாத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் எறையூர் முனுசாமி, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவர் அப்துல் நஹீம் பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: