சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு காய்கறி லாரிகளில் பொதுமக்களை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை

அண்ணாநகர்: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும், வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால் உள்ளிட்டவைகளை கொண்டு செல்லும் லாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, தென் மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் தினமும் கோயம்பேடு மார்க்கெட் வந்து செல்கின்றன. இந்த லாரிகளில் பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலாளர்களை சென்னையில் இருந்து மொத்தமாக தென் மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்படுவதாக புகார் எழுந்தது.

அதன்பேரில், கோயம்பேடு முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் லாரிகளை மடக்கி ஆய்வு செய்தனர். 144 தடை உத்தரவை மீறி லாரிகளில் பொதுமக்களை அழைத்து செல்லக்கூடாது எனவும், மீறும் லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories: