ஓட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டு பெண் பலி

சென்னை: மலேசியவை சேர்ந்தவர் யோகலிங்கம் (72). இவரது மனைவி ரஞ்சிதம் (70), வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற வந்தார். பின்னர் ராயப்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இருவரும் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென மூதாட்டி ரஞ்சிதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து யோகலிங்கம் ஓட்டல் ஊழியருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி ஓட்டல் ஊழியர்கள் சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertising
Advertising

வெளிநாட்டை சேர்ந்த மூதாட்டி என்பதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சத்தில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தனர். அப்போது மூதாட்டி வயது மூப்பு நோய் காரணமாகத்தான் இறந்துள்ளார். கொரோனா தொற்று ஏதும் இல்லை என்று தெரிவித்தனர்.இதைதொடர்ந்து போலீசார் மூதாட்டி உடலை தயக்கத்துடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: