பிப்ரவரியுடன் காலாவதியான ஆவணங்கள் ஜூன் 30ம் தேதி வரை செல்லுபடியாகும்: மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக பிப்ரவரியுடன் முடிந்த பல்வேறு விதமான ஆவணங்கள் வரும் ஜூன் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:டெல்லியில் உள்ள மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சில ஆலோசனைகளை கூறியுள்ளது. கோேரானா பரவுவதை தடுக்க பல்வேறு முடிவுகளை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. பல்வேறு விதமான ஆவணங்கள் புதுப்பிக்க முடியாத அளவுக்கு அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சட்டங்களின்படி தகுதிச்சான்று, அனுமதி சான்று (அனைத்து வகை), ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் முடிவடைந்து விட்டால், அவற்றுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

அதன்படி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பிப்ரவரி 1ம் தேதி காலாவதியாகிருந்தாலும், ஜூன் 30ம் தேதி காலாவதியாக இருந்தாலும் இரண்டுக்குமான செல்லுபடியாகும் காலம் ஜூன் 30ம் தேதியாகும். எனவே இதை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்த கடிதம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள டிஜிபி அலுவலகம், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், போக்குவரத்துத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: