கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அரசு கட்டிடங்களில் படுக்கை அமைக்கும் பணி: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கான படுக்கை தட்டுப்பாடு ஏற்படுதை தடுக்க தமிழக அரசு களத்தில் இறங்கி உள்ளது. 138 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 3,495 படுக்கை வசதிகள்,  புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள் மூலம் 3,068, புதிதாக கட்டப்பட்டுள்ள 3,974 படுக்கைகள், 138 தனியார் மருத்துவமனைகளில் 6,486 படுக்கை வசதிகள் என மொத்தம் 17,023 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. பழைய கட்டிடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை மருத்துவமனை போன்று மாற்ற தமிழக அரசு பொதுப்பணித்து கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியார் ராஜாமோகனுக்கு உத்தரவிட்டார்.

Advertising
Advertising

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 13, சென்னை 7, கோவை 46, கரூர் 67, நாகை 42, சிவகங்கை 53, தஞ்சாவூர் 70, திருவாரூர் 21, விருதுநகர் 26, நாமக்கல் 57, பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை தலா 26, ராமநாதபுரம் 35, தென்காசி, தூத்துக்குடி தலா 15, திருச்சி 14, கிருஷ்ணகிரி 31, மதுரை 17, நெல்லை 22, ராணிப்பேட்டை 2, திருவள்ளூர் 5, திருவண்ணாமலை 7, திருப்பூர் 11, தர்மபுரி 24, கடலூர், காஞ்சிபுரம் தலா 2, ஈரோடு 46, கன்னியாகுமரி 18, சேலம் 32, நீலகிரி 14, வேலூர் 4, விழுப்புரம் 2 என மொத்தம் 38 மாவட்டங்களில் 825 கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 14 லட்சத்து 6 ஆயிரத்து 378 சதுர மீட்டர் பரப்பளவிலான இந்த 825 கட்டிடங்களில் 50,852 படுக்கை வசதிகள் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: