இரவு பகலாக மாநகரம் முழுவதும் ஊரடங்கு பணியில் உள்ள போலீசாருக்கு சாமியானா பந்தல்: தினமும் மோர், பழச்சாறும் விநியோகம்

சென்னை:  144 தடை உத்தரவால் மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவாரமாக பனி மற்றும் கொளுத்தும் வெயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவுப்படி தற்போது சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.  

சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 166 இடங்களில் கடந்த 7 நாட்களாக போலீசார் தற்காலிக வாகன சோதனைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு சோதனை சாவடிகளில் சுழற்சி முறையில் உதவி ஆய்வாளர் தலைமையில் 5 காவலர்கள் பணியில் உள்ளனர். 166 தற்காலிக சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அமரும் வகையில் 5 பிளாஸ்டிக் சேர் ஒரு சாமியானா பந்தல் அமைத்து தரப்பட்டுள்ளது. தினமும் மோர், பழச்சாறு, தண்ணீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்படுகிறது.

Related Stories: