கொரோனா தொற்று காரணமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை : கொரோனா தொற்றை தடுக்க 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழ அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த வைரஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது. எனவே 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல்த்துறை வெளியிட்டுள்ள அறிக்கை :  60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனித்து இருத்தல் வேண்டும். சமூக இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். கைகளை சோப்பால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைபடி தினசரி உட்கொள்ளும் மருந்துகளை தவறாது எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்த அளவையுயும கட்டுக்குள் வைத்திருத்தல் வேண்டும். தண்ணீரினை அவ்வப்போது அருந்த வேண்டும். தொண்டை வலி, காய்ச்சல், சளி இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் 104 அவசர தொலைபேசி எண் அல்லது கட்டணமில்லை தொலைபேசி எண் 1800 120 555550 ஆகியவற்றை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: