கொரோனா தடுப்பு நிவாரண பணிக்கு டோலிவுட், பாலிவுட் நடிகர்கள் நிதியுதவி

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிவாரண பணிகளுக்காக தெலுங்கு, இந்தி நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பரவாமல் தடுக்க வேண்டிய பணிகளை மத்திய அரசு, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.  கொரோனா நிவாரண பணிகளுக்காக பல தரப்பினரும் நிதியுதவி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 25 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.  தெலுங்கு நடிகர் பிரபாஸ், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு 3 கோடியும் தெலங்கானா, ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சமும் என மொத்தமாக 4 கோடி நிவாரணம் வழங்கியுள்ளார்.

நடிகர் பவன் கல்யாண் 2 கோடி நிதியுதவி அளித்துள்ளார். சிரஞ்சீவி, மகேஷ்பாபு ஆகியோர் தலா 1 கோடி வழங்கியுள்ளனர். ராம்சரண், 75 லட்சம் வழங்கியிருக்கிறார். அல்லு அர்ஜுன் 1.25 கோடி அளித்திருக்கிறார். இந்தி நடிகர் வருண் தவன், 30 லட்சமும் பாடகி லதா மங்கேஷ்கர் 25 லட்சமும் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன், முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சமும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் 2 லட்சமும் வழங்கியுள்ளனர். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 50 லட்சத்தை அளித்திருக்கிறார்.

Related Stories: