சிறு சேமிப்பு வட்டி 1.4% வரை குறைப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான வட்டியை 0.7 சதவீதம் முதல் 1.4 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்துள்ளது.  சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 0.75 சதவீதம் குறைத்துள்ள நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிபிஎப் வட்டி 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு வட்டி 1.1 சதவீதம் குறைத்து 6.8 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்திரங்களுக்கு வட்டி 0.7 சதவீதம் குறைத்து 6.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கு வட்டி 8.6 சதவீதமாக இருந்தது. இது 1.2 சதவீதம் குறைக்கப்பட்டு 7.4 சதவீதமாகவும், செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாகவும், 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்களுக்கு வட்டி அதிகபட்சமாக 1.4 சதவீதம் குறைத்து 5.8 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: