×

சில்லி பாயின்ட்...

* ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால், அக்டோபர் - நவம்பரில் ஐபிஎல் டி20 தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவு உலக தரவரிசை பட்டியல் தற்போதுள்ள நிலையிலேயே நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று உலக பேட்மின்டன் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
* கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு போட்டித் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்முறை வீரர், வீராங்கனைகளுக்கான ஊதியம் குறைக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
* கொரோனா பிரச்னையால் கிரிக்கெட் தொடர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான கால அட்டவணையை நீட்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
* தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்களின் 2020-21 சீசனுக்கான ஊதியம் குறைக்கப்படாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* வீரர்கள் களத்தில் இருக்கும்போது ஸ்மார்ட் வாட்ச் அணிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
* இந்தியா யு-17 மகளிர் கால்பந்து அணி பயிற்சியாளர்கள் டென்னர்பி, பெர் கார்ல்சன் இருவரும் ஸ்வீடன் திரும்ப அந்நாட்டு அரசு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது.
* நான் விளையாடிய காலத்தில் எதிர்கொண்ட மிகச் சிறந்த இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாஹன் தான்’ என்று ஆஸ்திரேலிய அணி முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் கூறியுள்ளார்.
* இங்கிலாந்தை சேர்ந்த லங்காஷயர் கவுன்டி கிரிக்கெட் கிளப் தலைவர் டேவிட் ஹாட்ஜ்கிஸ் (71 வயது) கோவிட்-19 நோய்க்கு பலியாகி உள்ளார்.

Tags : ICC Men's World Cup T20 Series ,Australia , Australia, ICC Men's World Cup T20 Series
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...