201 நாடுகளில் தடம் பதித்த கொரோனா: உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு...பலி எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியது

பிரிட்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 200 நாடுகளை சேர்ந்த 39,016 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சரியாக 3 மாதக் கடைசியில் உலகம் முழுவதும் 8 லட்சம் மக்களை பாதித்து இருக்கிறது. WHO கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி கொரோனா வைரஸ் பற்றிய செய்தியை உறுதிசெய்தது. சரியாக 3 மாதத்தில் உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகின் ஒட்டுமொத்த நாடுகளையும் பீதியில் வைத்திருக்கிறது. தற்போது கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது.

11,591 பேர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். ஆனால் நோய்த்தொற்றில் அமெரிக்கா தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் 164,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3173 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 201 நாடுகள் பாதித்துள்ள கொரோனா வைரஸ் மூலம் இதுவரை 803,180 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். 39,033 பேர் இறந்துள்ளனர்.

Related Stories: