ஊரடங்கின் போது பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு: தமிழக அரசு

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் பணி புரியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. . சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிபுரிந்து வரக்கூடிய நியாய விலைக் கடைக்காரர்களுக்கு ஊக்கத்தொகையானது அறிவித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில் விற்பனையாளர்களுக்கு 2,500 ரூபாயும், பொட்டலமிடுபவருக்கு 2,000 ரூபாயும் அறிவித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பணி புரிந்து கொண்டிருப்பதால் விற்பனையாளருக்கு 5,000 ரூபாயும், பொட்டலமிடுபவருக்கு  4,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு பரிசீலினை செய்து விற்பனையாளர் 21,517 பேருக்கு, 2,500 ரூபாய் வீதம் வழங்குவதற்கும், பொட்டலமிடுபவர்கள் 3,777 பேருக்கு 2,000 வீதம் மொத்தமாக சுமார் 6 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊக்கத்தொகையானது வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக நியாய விலைக்கடைகளில் பணிபுரியக்கூடிய 25,294 பேருக்கு 6, 13, 46, 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இந்த ஊக்கத்தொகையானது வழங்கப்படும் எனவும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: