வூகானின் வைரோலஜி ஆய்வு கூடத்தில் தான் கோவிட் 19 வைரஸ் செயற்கையாக உருவாக்கி உலகெங்கிலும் பரப்பபட்டு உள்ளது : ஐரோப்பிய விஞ்ஞானிகள்

பெய்ஜிங் : கொரோனா பற்றிய உண்மைகளை சீனா மறைத்துவிட்டதாக சர்வதேச அரங்கில் குற்றச்சாட்டு அதிகரித்துள்ள நிலையில், ஆட்கொல்லி வைரஸை உருவாக்கி பரவ செய்ததும் சீனா தான் என்று எழுந்துள்ள விமர்சனங்கள் உலகை அதிர செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வுகான் நகரில் உருவாகி 40,000 பேரின் உயிரை கொரோனா குடித்த போதும் அது பற்றிய உண்மைகள் மறைக்கப்பட்டன என்பது சீனா மீதான முதல் குற்றச்சாட்டு.

*இதன் எதிரொலியாக சீனா எதிர்பார்த்தபடி உலகெங்கும் கொரோனா பரவியதாக கூறுகிறது அமெரிக்கா. இந்த விவகாரத்தில் அதிபர் ஜின்பிங்- கிற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தால் பழியை தங்கள் பக்கம் திருப்பிவிட சீனா முயற்சித்ததாக அமெரிக்கா சாடுகிறது.

*இதே போல கொரோனா இயற்கையாக உருவானது என்ற சீனாவின் விவாதத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகளும் மறுத்துள்ளனர். வூகானில் மட்டுமே உள்ள வைரோலஜி ஆய்வு கூடத்தில் தான் கோவிட் 19 வைரஸ் செயற்கையாக உருவாக்கி பரப்பபட்டு உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

*ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகள் தங்களது வளர்ச்சியை முடக்கும் முயற்சி என்று சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. சீனா என்னதான் மறுப்புகளை தெரிவித்தாலும் விஞ்ஞானப் பூர்வ விமர்சனங்களில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

*நியூயார்க்கில் வசிக்கும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஜெனிஃபர் என்பவர் சீனாவில் செல்போன் சேவை வழங்கும் 3 நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் 1.5 கோடி வாடிக்கையாளர்களை இழந்துவிட்டதை சுட்டிக் காட்டியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த அவர்கள் பற்றிய விவரங்களை சீனா மறைந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளார். இப்படி சீனா பற்றி அடுத்தடுத்து வரும் தகவல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.   

Related Stories: