×

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கினார் டென்னிஸ் புயல் சானியா மிர்சா

டெல்லி: கொரோனா அச்சத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாடி வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு ரூ.1.25 கோடி நிதியை இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்சா வழங்கினார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவையும் இது விட்டுவைக்கவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் நோய் பரவாமல் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், மிகவும் பின் தங்கிய மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தங்கள் அன்றாட நாளை கழிப்பதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்ய பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களிடம் நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர். பல்வேறு தலைவர்கள், முன்னணி நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் சச்சின், கங்குலி, ரெய்னா என பிரபலங்களை தொடர்ந்து தற்போது இணைந்துள்ளார் சானியா மிர்சா. யூத் ஃபீட் என்ற அமைப்பின் மூலம், சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு உதவ போதுமான தொகையான 1.25 கோடி ரூபாயை நிதியுதவியாக கொடுத்துள்ளார் சானியா மிர்சா. இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்; கடந்த வாரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தோம்.

சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு உதவியதோடு அல்லாமல், இந்த முயற்சி மேலும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tennis Storm ,Sania Mirza , Sponsored by, Tennis Storm Sania Mirza
× RELATED கணவர் 3வது திருமணம் செய்த நிலையில்...