வாகன ஒட்டிகளுக்கு சலுகை: பிப்.1-ல் காலாவதியாகும் வாகன அனுமதி, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க ஜூன் 30-வரை அவகாசம்...மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: இந்தியா உட்பட உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர். 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழத்தை பொருத்தவரை இன்று 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் எண்ணிக்கை 67-லிருந்து 74-ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை ஒருவர் பலியாகியுள்ளார். இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த 24-ம் தேதி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா என்ற கொடூர வைரசை தடுக்க வேண்டுமென்றால் சமூகத்திலிருந்து விலகி இருப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். அதற்காக கடந்த இன்று (கடந்த 24-ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றார். இதனால், தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தியவாசிய பணிகளை தவிர அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முடிந்த வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.   

Related Stories: