சற்றும் வீரியம் குறையாத கொரோனா தொற்று : ஸ்பெயினில் 7,716 பேர் பலி; இத்தாலியிலும் உயிரிழப்பு 11,591 ஆக அதிகரிப்பு

ஸ்பெயின் : ஐரோப்பாவில் மட்டுமல்ல உலகிலேயே கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருப்பது ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளில் தான். குறிப்பாக ஸ்பெயினில் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். மருத்துவ கண்காணிப்பில் இருந்த 915 பேர் உயிரிழந்துவிட்டதை அடுத்து நாட்டின் பலி எண்ணிக்கை 7,716 ஆக உயர்ந்துவிட்டது. ஸ்பெயினில் இதுவரை 87,956 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கில் தினமும் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த முடியாமல் ஸ்பெயின் அரசு தடுமாற்றம் கண்டுள்ளது.

இத்தாலியிலும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் தினசரி செய்தியாகவே மாறிவிட்டது. கொரோனா வைரஸ் ஒரே நாளில் 812 உயிர்களை பறித்துச் சென்றுவிட்டதால் இத்தாலியில் பலி எண்ணிக்கை 11,591 ஆக அதிகரித்துள்ளது. அங்கு ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு இலக்காகி உள்ள நிலையில்,  ஸ்பெயின் மற்றும் இத்தாலி அரசுகள் மக்களிடம் விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 3ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கை இத்தாலி மேலும் 9 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய முதல் நாடு இத்தாலி என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: