×

டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் நடந்த மத வழிப்பாட்டில் பங்கேற்ற 10 பேர் பலி, பலருக்கு கொரோனா தொற்று உறுதி; 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

புதுடெல்லி: டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கானாவை சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியானது தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமானது. இங்கு மத கூட்டம் ஒன்று கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 15ம் தேதி வரை  நடைபெற்றது.

*டெல்லியில் ஏற்கனவே மார்ச் மாதம் தொடக்கத்திலேயே ஒன்று கூடல்களுக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. ஆனாலும் தடையை மீறி இந்த பிரசார கூட்டம் நடைபெற்றது.

*இதில் மலேசியா, இந்தோனேசியா, அரேபியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.

*ஆனால் இதுபற்றி டெல்லி அதிகாரிகளுக்கு எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்து வந்தது.

*இந்நிலையில் இந்த மத வழிப்பாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டிலும் குறிப்பாக ஈரோடு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது.

*ஶ்ரீநகரில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்; ஹைதராபாத்தில் 11 இந்தோனேசியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அந்தமானை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் தமிழகம், கர்நாடகா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளார்.வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

*மசூதியில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கொரோனா பரிசோதனைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

*இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற டெல்லியைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.மாநாட்டில் பங்கேற்ற 334 பேரை பரிசோதித்ததில் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  


Tags : Nizamuddin ,area ,Delhi , Coronary infection in Nizamuddin area in Delhi kills six
× RELATED வாட்டி வதைக்கும்...