இந்திய முத்திரைச் சட்டம் குறித்து தவறான புரிதல்; நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலியானது...மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

டெல்லி: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 7,21.330-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 37,780  பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே,கடந்த 24-ம் தேதி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த இன்று (கடந்த  24-ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இந்த முடிவால் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்திக்கலாம். ஆனால், நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம். ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம் என்றார். அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் தடையின்றி கிடைக்கும் என்று  அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர் உள்ளிட்ட  பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் முதல் தொலைத் தொடர்பு சேவை வரை பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 2020-21 நிதியாண்டு தொடங்கும் மாதம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், 2020 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்க வேண்டிய நிதியாண்டு ஜுலை 1-ம் தொடங்கும் என ஊடகங்களில் தகவல் வெளியாகியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிதி அமைச்சகம், நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என்று தெரிவித்துள்ளது. இந்திய முத்திரைச் சட்டத்தில் செய்யப்பட்ட வேறு சில திருத்தங்கள் தொடர்பாக 2020 மார்ச் 30 அன்று இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதியாண்டு:

நிதியாண்டு எனப்படுவது, வணிகத்திலும் இன்ன பிற அமைப்புகளிலும் வருடாந்திர நிதிநிலையை கணக்கீடு செய்யப் பயன்படும் காலகட்டமாகும். கணக்கு வைப்பு மற்றும் வரிவிதிப்பு முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள், ஒவ்வொரு 12  மாதத்திற்கும் நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க வலியுறுத்துகின்றன. நிதியாண்டு எனப்படுவது நாட்காட்டி வருடமாக இருக்கவேண்டும் என்பதில்லை; வெவ்வேறு நாடுகளில் மாறுபடுகின்றன. வணிகவகையைப் பொருத்தும் நிதியாண்டு  காலகட்டம் வேறுபடலாம். வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவும் நிதியாண்டே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: