குணமடைந்தார் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பதை அந்நாட்டு தேசிய சுகாதாரத் துறை கடந்த திங்கள்கிழமை கண்டுபிடித்தது. இதையடுத்து அவரும் அவரது மனைவி கமிலாவும் பால்மோரலில் உள்ள அரண்மனையில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், இதுகுறித்து இளவரசர் சார்லசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், `‘கடந்த சில வாரங்களாக இளவரசர் சார்லஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் யாரிடம் இருந்து அவருக்கு கொரோனா பரவியது என்பதை கண்டறிய முடியவில்லை.

Advertising
Advertising

தற்போது ஒரு வாரம் கடந்த நிலையில், இளவரசர் சார்லஸை நேற்று பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தலில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளார்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: