×

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நர்ஸ் பணிக்கு திரும்பிய நடிகை

சென்னை: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடிகை ஷிகா மல்ஹோத்ரா நர்ஸாக பணியாற்றி வருகிறார். இந்தியில் ஷாருக்கான் நடித்த ஃபேன் மற்றும் ரன்னிங் ஷாதி டாட் காம், லக்கி கபுதர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷிகா மல்ஹோத்ரா. இவர் டெல்லியிலுள்ள வர்தமான் மகாவீர் மருத்துவ கல்லூரியில் செவிலியர் படிப்பை முடித்துள்ளார்.  சில காலம் நர்ஸாக பணியாற்றி வந்தவர், திடீரென மாடலிங் துறைக்கு சென்றார். அதன் மூலம் நடிகையாக மாறினார். இப்போது சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கொரோனாவால் மும்பையில் பலர் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து ஷிகா மனம் வருந்தினார். இதையடுத்து தனது நர்ஸ் பணிக்கு அவர் திரும்பியிருக்கிறார்.

மும்பையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் தன்னார்வல நர்சாக அவர் பணியாற்ற துவங்கியுள்ளார். இது குறித்து ஷிகா கூறும்போது, ‘நர்ஸ் வேலைக்காக நான் படிக்கும்போது, மக்களுக்கு தொண்டு செய்ய ஆசைப்பட்டேன். சில காலம் அந்த பணியில் இருந்த பிறகு, எனது பாதை சினிமா பக்கம் மாறியது. இப்போது கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடியவில்லை. இதனாலேயே மீண்டும் தொண்டு பணிக்கு வந்திருக்கிறேன்’ என்றார். ஷிகாவுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Tags : actress ,nurse ,corona victims , orona, Therapy, Nurse Work, Actress Shika Malhotra
× RELATED 2 மாதமாக அபுதாபியில் தவிக்கும் நடிகை