டிவி ரிமோட், கீபோர்டு, வாகனங்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்யவேண்டும்: மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

சென்னை: டிவி ரிமோட், கீ போர்டு, வாகனம் உள்ளிட்ட வீட்டில் உள்ள பொருட்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது :  சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உள்ள பகுதிகளை சுற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளே தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரில் தேவையான அளவு டெட்டாலை கரைத்து வீட்டின் தரை, கதவுகள் உள்ளிட்ட அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.

Advertising
Advertising

இதைத்தவிர்த்து வீட்டின் வெளிப்புற கதவுகள், கார் ஸ்டியரிங், டிவி ரிமோட், கீ ேபார்டுகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின்  கைப்பிடி பகுதிகள் உள்ளிட்ட அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.  தினசரி அடிப்படையில் இதை செய்ய வேண்டும். உங்களின் உறவினர்களுக்கும் இதை தெரியப்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து மக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: