கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் இந்திய மருத்துவமுறை மருந்துகள்: முன்பே அறிவித்தது ‘ஆயுஷ்’

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்புக்கு சிறந்தது சித்த மருந்து தான் என்று மத்திய ஆயுஷ் அமைப்பு முன்கூட்டியே அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதமே மத்திய ஆயுஷ் அமைப்பும் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவல் குறித்து ஆலோசிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் தொடர்ச்சியாக மேற்கொண்ட விவாதங்களின் அடிப்படையில் 3 சித்த மருந்துகள் கொரோனா பாதிப்புக்கு தடுப்பு மருந்தாக இருக்கும் என்று அறிவித்தது.  இந்த அறிவிப்பு கடந்த 6ம் தேதியே மத்திய ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, மற்றும் ேஹாமியோபதி (ஆயுஷ்) அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ்கோட்சா, அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து செயலாற்றும் ஆயுஷ் பல்வேறு இந்திய மருத்துவ முறைகளை உள்ளடக்கியது. தற்போதுள்ள கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த சில மருந்துகளை பரிந்துரை செய்கிறது. இதை உங்கள் மாநிலங்களில் இந்த மருந்துகளை மேற்கண்ட நோய்க்கு பயன்படுத்தலாம். ஆயுஷ் அமைப்பின் மூலம் பரிந்துரை செய்யப்படும் இந்த மருந்துகள் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை மேலும் நோய் எதிர்ப்பை உண்டாக்குவதுடன் மூச்சுத் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருந்து சீரான சுவாசத்தை மேம்படுத்தும். இது தொடர்பாக சில மருந்துகளை பரிந்துரை செய்கிறோம்.  என்று செயலாளர் ராஜேஷ் கோட்சா தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கடிதத்தின் இணைப்பில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருந்துகள் சிலவற்றை பரிந்துரை செய்துள்ளது.

1. ஆயுர்வேத மருந்துகள்:  ஆயுஷ் 54 மாத்திரை 2 வீதம் தினம் இரண்டு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும். அகஸ்திய ஹரீதஹீ என்ற மருந்து 5 கிராம் வீதம் தினம் இரண்டு வேளை வெந்நீரில் எடுத்துக் கொள்ள வேண்டும், அணுத் தைலம். இந்த தைலத்தை 2 சொட்டு வீதம் மூக்கில் விட வேண்டும். மாத்திரைகள்: சம்ஷமணி வடி/500 மிலி.கி/ தினமும் இரண்டுவேளை வெந்நீருடன், சாப்பிட வேண்டும். 2. சித்த மருத்துவ முறையின் கீழ்:  நில வேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர், விஷசுரக் குடிநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் 60 மிலி தினமும் இரண்டு வேளை சாப்பிட வேண்டும். மேலும், ஆடாதோடை மணப்பாகு 10 மிலி/ தினமும் இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.

மேற்கண்ட மருந்துகள் கொரோனா வைரசுக்கு எப்படி செயலாற்றுகிறது என்று விளக்கமாக ஆயுஷ் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மருந்துகள் பட்டியலையும் இணைத்து 5 பக்கங்கள் கொண்ட கடிதங்களை அனைத்து மாநில அரசுக்கும் அனுப்பியுள்ளது. ஆனால் தமிழக சுகாதாரத்துறை இது குறித்து எந்த அறிவிப்போ அல்லது ஆலோசனைகளையோ சம்பந்தப்பட்ட இந்திய மருத்துவ முறைகள் துறைக்கு தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

Related Stories: