கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:  கொரோனா வைரஸ் பரவலின் 2ம் கட்டத்தில் நாம் இருக்கிறோம். இது நீடித்து 3ம் கட்டத்துக்கு சென்றால் ஆபத்தான கட்டத்துக்கு தள்ளப்படுவோம். எனவே வீட்டிலேயே இருந்து, அவசர, அவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் சென்று வந்து, அரசின் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கடைகளில் உணவுப்பொருட்கள், மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அரசு கண்காணித்து மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் வணிகர் சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகள் அசாதாரண சூழலில் விடுக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.

Advertising
Advertising

Related Stories: