×

கொரோனா தடுப்பு மருந்துகளுடன் புறப்பட்ட விமானம் தீப்பிடித்து 8 பேர் பலி: மணிலாவில் சோகம்

மணிலா: கொரோனா தடுப்பு மருந்துகளுடன் டோக்கியோவுக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையிலேயே தீப்பிடித்து எரிந்ததில், பிலிப்பைன்சில் 8 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின் பசய் நகரில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் விமானம் ஓடுபாதையில் புறப்பட்டபோது திடீரென விபத்துக்குள்ளானது. விமானம் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததில் 8 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மருத்துவ பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்டபோது விபத்தில் சிக்கிக்கொண்டது.

உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்; ஒருவர் அமெரிக்கர், மற்றொருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். அடையாளம் காணப்பட்டவர்களில் நிக்கோ பாடிஸ்டா என்ற இளம் மருத்துவரும் அடங்குவார். அவரது சகோதரியான பாடகி ரியா பாடிஸ்டாவால் நேற்று இரவு ஒரு பேஸ்புக் பதிவில் இதனை தெரிவித்தார். இதுகுறித்து, மணிலா சர்வதேச விமான நிலைய ஆணையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தங்கள் மீட்புக் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ரசாயன நுரை கொண்டு தீப்பிழம்புகளைத் தடுத்து அணைத்ததாகவும், இரவு 9.02 மணிக்கு தீ முழுவதும் அணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

விசாரணையில், ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்பால் பிலிப்பைன்ஸ் மக்கள் சிலர் சிக்கித்  தவிக்கின்றனர். அவர்களை அங்கிருந்து அழைத்து வருவதற்காக, மணிலாவின் நினாய் அக்வினோ விமான நிலையத்தில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகளுடன்  விமானம் புறப்பட  ஆரம்பித்த சில நிமிடங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Corona ,Manila Corona ,Kill ,Manila , Corona, Flight, Kill, Manila
× RELATED குடோனில் திடீர் தீ விபத்து