×

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67-ஆக இருந்த நிலையில் 6-வது டிஸ்சார்ஜ்: கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் விடு திரும்பினார்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் வீடு திரும்பினார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயது பெண் வீடு திரும்பினார். பின்லாந்தில் இருந்து திரும்பிய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் பரவி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தோற்றால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த 25 வயது பெண் குணமடைந்து வீடு திரும்பினார். பின்லாந்திலிருந்து திரும்பிய நிலையில் கொரோனாவிற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுவரை 6 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 45,000 இருந்து 75,000-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 16,767, தஞ்சாவூர் 4,449, கன்னியாகுமரி 3,707, மதுரை 3,403, திருச்சி 3,045, நாகை 3,011 ஆக உள்ளது. குறைந்த பட்சமாக தேனியில் 506 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Coronal , Tamilnadu, Corona, Discharge, Submission, Adolescent
× RELATED சென்னையில் 10,000 ஆயிரத்தை நெருங்கும்...