×

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்த 17 பேரில் 16 பேர் டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றவர்கள்: மீதமுள்ள 519 பேரை தேடும் பணி தீவிரம்

சென்னை: டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 519 பேரை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர். மாநாட்டில் 16 பேருக்கு கொரோனா இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் பரவி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தோற்றால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 17 பேரில் 16 பேர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், புதுடெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 1,500 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்றவர்களில் 981 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 16 பேருக்கு கொரோனா இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது. மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 519 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 519 பேரை அடையாளம் காண தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள நபர்களின் விபரங்களை சேகரித்து அடையாளம் கண்டறியும் பணி தமிழக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : victims ,Tamil Nadu ,conference ,Delhi ,Coronation , Tamil Nadu, Corona, Delhi, looking for work
× RELATED தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா;...