முக கவசம் தயாரிக்கும் பணியில் ஆயுதப்படை போலீசார் தீவிரம்: மக்களுக்கு இலவசமாக விநியோகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் தயாரிக்கும் முக கவசம், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு முக கவசம் கூடுதலாக தேவைப்படுகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு தேவையான கிருமி நாசினி மருந்துகள் மற்றும் முக கவசங்களையும் ஆயுதப்படை போலீசாரே தயாரிக்க முடிவு செய்தனர். இதன்படி திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு தேவையான கிருமி நாசினி மற்றும் முக கவசங்களை ஆயுதப்படை பிரிவில் தயாரிக்கப்படுகிறது. ஆயுதப்படை பிரிவில் ஹைசோ புரோபைல் ஆல்கஹால் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட வேதிப்பொருள்களை, அதற்கான விகிதாச்சாரப்படி தண்ணீரில் கலந்து கிருமி நாசினி தயாரிக்கப்படுகிறது.

தரமான துணியால் முக கவசம் தயாரிக்கும் பணியில் ஆயுதப்படையை சேர்ந்த ஆண், பெண் காவலர்கள் ஈடு பட்டுள்ளனர். இந்த பணிகளை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அரவிந்தன், கூடுதல் எஸ்.பி., சிலம்பரசன் ஆகியோர் பார்வையிட்டனர். போலீசார் தயாரிக்கும் முக கவசங்கள் அனைத்தும் போலீஸ் நிலையங்கள், சோதனை சாவடி போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.இதுபோல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான முக கவசங்களை தயாரித்து கொள்கின்றது.

Related Stories: