சென்னையில் ரெட் அலர்ட் இல்லை; பொதுமக்கள் தைரியமாக இருக்க வேண்டும், பீதி அடையக்கூடாது: மாநகராட்சி

சென்னை: சென்னையில் எந்த பகுதியிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் பரவி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தோற்றால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் சிறப்பு அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனாவுக்காகச் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 13, 323 சிறப்பு வார்டுகளும் 3018 வென்டிலேட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு வார்டுகளில் 295 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் 25,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் குடியிருக்கும் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் வீடுகளில் கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடியிருந்த 9 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அவர்கள் குடியிருந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்; சென்னை: சென்னையில் எந்த பகுதியிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அரும்பாக்கம், புரசைவாக்கம், சாந்தோம்,விருகம்பாக்கம், சைதாப்பேட்டை , மேற்கு மாம்பலம்,போரூர், ஆலந்தூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய இடங்கள் கண்காணிப்பில் உள்ளன. சென்னையில் 9 இடங்களில் கொரோனா தோற்றால் பாதித்தோர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதார தோற்றால் பாதித்தோர் வீடுகளைச் சுற்றி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் தைரியமாக இருக்க வேண்டும் பீதி அடையக்கூடாது எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: