நாடு முழுவதும் உணவுத் தேவைப்படும் மக்களுக்கு இலவச உணவு பாக்கெட்டுகளை வழங்கும் இந்திய ரயில்வே : ஐஆர்சிடிசிக்கு சல்யூட்

டெல்லி : ஊரடங்கு அமலில் உள்ளதால் நாடு முழுவதும் உணவுத் தேவைப்படும் மக்களுக்கு தனது உணவகத்தில் இருந்து சமைத்த உணவை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.கொரோனா தடுப்பு நடிகையாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாட்டில் ஊரடங்கு அமுலில் இருக்கின்றது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வீடின்றி சாலையோரம் வாழ்பவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவுத் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உணவுத் தேவைப்படும் மக்களுக்கு தனது உணவகத்தில் இருந்து சமைத்த உணவை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.ஐஆர்சிடிசி சமையல் அறைகளில் இதற்கான வசதி இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று மட்டும்  ஐஆர்சிடிசி 11,300 மதிய உணவு பாக்கெட்டுகளை தேவைப்படும் மக்களுக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் வழங்கி உள்ளது. டெல்லி, பாட்னா, ராஞ்சி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள மக்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் எவ்வளவு பேருக்கு உணவு தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப சமைத்து உணவு வழங்க ரயில்வே தயராக இருப்பதாக அதன் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Related Stories: