×

ஊரடங்கை மீறி வெளியே வரும் மக்களை தடுக்க நாங்கள் எதுவும் செய்ய முடியாது: சென்னை ஐகோர்ட் கைவிரிப்பு

சென்னை: ஊரடங்கை மீறி வெளியே வரும் மக்கள் விவகாரத்தில் மனித உணர்வு மதிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றிலேயே வீட்டில் இருந்து ஒரு வழக்கறிஞர் அதிலும் குறிப்பாக மொபைல் போன் மூலம் வாதம் செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றால் இதுவே வரலாற்றில் முதல் முறை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் கொரோனா, ஊரடங்கு ஆகும். இந்த நிலையில் அவசர வழக்காக 3 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. எம்.எல்.ரவி என்ற மனுதாரர் தொடர்ந்த வழக்கில் இவர்கள் காவல்துறை அத்துமீறக்கூடாது.

இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வீடியோ கால் மூலம் மனுதாரர் மற்றும் அரசு வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தொழிலாளர்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சாலையில் செல்பவர்களை காவல்துறையினர் தடியால் அடிப்பது சட்டவிரோதம் என வழக்கறிஞர் ரவி வாதிட்டார். இதனை தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தற்போது உள்ள சூழ்நிலையை பொறுத்தவரையில் எந்த ஒரு குறிப்பிட்ட உத்தரவும் வழங்க முடியாது. அதே சமயம் தமிழக அரசு ஒரு நடுநிலையான பார்வையுடன் இந்த பிரச்னையை அணுக வேண்டும். மனித உயிர் மதிக்கப்பட வேண்டும் என் கூறியுள்ளது. கடைக்கோடி மனிதனும் இந்த தடை உத்தரவால் பாதிக்கப்படக் கூடாது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21-ன் கீழ் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. ஊரடங்கை மீறி வெளியே வந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேபோல 2 மருத்துவர்கள் மற்றோரு வழக்கை தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில் சித்த மருத்துவம் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். அது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு விரைவில் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த குழு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Curfew, Madras Icort
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...