கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்!!.. அரண்டு போன இத்தாலி..!! ஒரே நாளில் 756 பேர் பலி..!! பலி எண்ணிக்கை 10,779 ஆக அதிகரிப்பு...!!

ரோம் : கொத்து கொத்தாக நிகழ்ந்து வரும் கொரோனா மரணங்களை தடுத்து நிறுத்த வழிதெரியாமல் இத்தாலி அரசு தடுமாறி வருகிறது. கொரோனா வைரஸின் தீவிர பரவல் எதிரொலியாக இத்தாலியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 756 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனையடுத்து அங்கு ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,779 ஆக அதிகரித்துள்ளது. கடும் தடுப்பு நடவடிக்கை மத்தியிலும் இத்தாலியில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் அங்கு 5,300 பேர் புதிதாக தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.

இதனால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,689 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியை இத்தாலி அரசு உயர்த்தியுள்ளது. மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக 40 கோடி யூரோக்களை அதாவது இந்திய மதிப்பில் மூவாயிரத்து 350 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் ஜிசப் காண்டே அறிவித்துள்ளார்.ஏற்கெனவே பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்வதற்காக 2 லட்சத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து மாநகராட்சிகளுக்கும் 36 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவித்துள்ளது.

Related Stories: