கொரோனா வைரஸ் பாதிப்பில் ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 812 உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 7,340 ஆக உயர்வு

ஸ்பெயின்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 812 உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,340 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி கொன்ற குவித்து வரும் கொரோனா வைரஸ் என்ற கோவிட் 19 வைரஸ் இதுவரை 34 ஆயிரம் மக்களை உலகம் முழுவதும் சாகடித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 724436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில் தான் 7-ல் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கு சுமார் 1.5 லட்சம் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலி, ஸ்பெயினில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 812 உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,340 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் வியாழக்கிழமை முதல் 24 மணி நேர காலப்பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இது குறைவு ஆகும். இது இத்தாலிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக மோசமான பாதிப்பை கொண்டுள்ளது. ஸ்பெயினில் நேற்று 838 வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85,195 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: