தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67 ஆக உயர்வு: தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுக்கு தமிழக ஆளுநர் தலா ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும் ஆளுநர் நிதியுதவி வழங்கியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 29 பேர் உயிரிழந்த நிலையில், 1071 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 22ம் தேதி ஒரு நாள் மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். தமிழகத்தில் நேற்று வரை 50 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

இந்நிலையில் தற்போது மேலும் கூடுதலாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என கூறினார். ஆகவே மொத்தம் 67 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு திரையுலகத்தினர், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றனர். அதில் தனது பங்கிற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.2 கோடி நிதி வழங்கியுள்ளார். அதில் ரூ.1 கோடி தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கும், ரூ.1 கோடி பிரதமரின் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார்.

Related Stories: