சென்னைக்கு கடந்த பிப்.15-ல் இருந்து மார்ச் 22-ம் தேதி வரை வந்த வெளிநாட்டு பயணிகளின் பட்டியல் தயாரிப்பு பணிகள் தீவிரம்: விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு கடந்த பிப்.15-ம் தேதியில் இருந்து மார்ச் 22-ம் தேதி வரை வந்த வெளிநாட்டு பயணிகளின் பட்டியல் தயாரிப்பு பணியில் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று நோயால் இறந்தவர் எண்ணக்கை 27-ஆக உள்ளது. தற்போது தமிழகத்தில் ஒருவர் மட்டும் இறந்துள்ளார் என தெரிவித்தார். இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படியில் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இந்தியாவில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 1139 பேர்களுக்கு சோதனையில் Positive-ஆக கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 50 பேர் கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 67-ஆக அதிகரித்துள்ளது. காட்டுத்தீயாய் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்கும் விதமாக வெளிநாடு சென்று திரும்பும் பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் ஜன.15-ம் தேதியில் இருந்து மருத்துவ பரிசோதனை தொடங்கியது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஜன.15-ம் தேதியில் இருந்து மார்ச் 22-ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து 1, 50, 000 பேர் வந்துள்ளனர். ஆனால் பிப்.15-ம் தேதிக்கு பிறகு வந்தவர்கள் சுமார் 50,000-க்கும் குறைவானவர்களே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 1 லட்சம் பேர் மக்களோடு கலந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்பதற்காக அவர்களை கண்டுபிடித்து மருத்துவ கண்காணிப்பில் வைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக வெளிநாட்டு பயணிகளின் பட்டியல் தயாரிப்பு பணியில் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: