வெளிநாடு சென்று வந்த ஊழியர்களை தனிமைப்படுத்தாமல் அலுவலகத்தில் அனுமதித்ததால் நொய்டாவில் 31 பேருக்கு கொரோனா : நிறுவனம் மீது வழக்குப்பதிவு

லக்னோ : வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய தனியார் நிறுவன ஊழியர்கள் மூலமாக நொய்டாவில் 31 பேருக்கு கொரோனா பரவிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி அருகே நொய்டாவில் இயங்கி வரும் தனியார் நிறுவனம், தீயணைப்பு கருவிகளை தயாரித்து வருகிறது. இந்த கருவிகளை விற்பனை செய்வதற்கு ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். அவ்வாறு திரும்பியவர்களை தனிமைப்படுத்தாமல் அலுவலகத்தில் அனுமதித்ததால் குறிப்பிட்ட நிறுவனத்தில் மேலும் 9 பேருக்கு தொற்று பரவி உள்ளது.

ஊழியர்கள் குடியிருக்கும் பாராஸ் டைரா அடுக்குமாடி குடியிருப்பில், நோய் தொற்று பரவியதால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இதனால் மொத்தம் 31 பேருக்கு கொரோனா பாதித்தது உறுதி செய்யப்பட்டது. பாராஸ் டைரா அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார், குறிப்பிட்ட நிறுவனம் மீது வைரஸ் பரவுவதற்கு துணை போனதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் தனியார் நிறுவனத்தை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. 

Related Stories: