பெருநகரங்களில் இருந்து வெளியேற முடியாதவர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்க வேண்டும் : மத்திய, மாநில அரசுகளுக்கு ப. சிதம்பரம் கோரிக்கை

சென்னை :  எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்து விட்டதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டி உள்ளார். தினக்கூலி தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு ஏற்பாடு செய்யவில்லை என்றும் அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.இதுவரை 29 பேர் உயிரிழந்த நிலையில், 1071 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 22ம் தேதி ஒரு நாள் மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஒரு நாள் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட அன்றைக்கே திடீரென நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார்.

மக்களுக்கு போதுமான கால அவகாசத்தை தராமல் ஏப்ரல் 14ம் தேதி பிறப்பிக்கப்பட்ட 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் சாடியுள்ளார். அதே சமயம் ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து வீட்டில் முடங்கி கிடைக்கும் ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ரூ.1.7 லட்சம் கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது. ஆனால் நிவாரண நிதி போதுமானதல்ல என்றும் சிதம்பரம் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்து விட்டது.பெருநகரங்களில் இருந்து வெளியேற முடியாதவர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்க வேண்டும்.நிதியமைச்சர் அறிவித்த நிவாரணங்கள் போதுமானதாக இல்லை.நிதியமைச்சர் அறிவித்த திட்டங்களால் தொழிலாளர்கள் க்ராமங்களுக்கு திரும்ப வேண்டிய நிலை உள்ளது.இன்றோ, நாளையோ நிதி நிவாரண 2ம் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>